ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 128
weblink
பாடல்:128
ஸத்குருவாய் அருளியிடும்
நீயுமில்லை!
ஸத்சீடன் ஆகியுள்ள
யாமும் இல்லை!
முக்குணமாய் தோன்றியதோர்
பிரிவும் இல்லை!
மூலமதாம் அவித்யை இல்லை!
மாயை இல்லை!
துர்க்குணமாய் தோன்றியதோர்
ஜகத்தும் இல்லை!
தொடர்புற்ற
(ஜீவன் + ஈசன் =ஜீவேஸ்வரர்) ஜீவேஸ்வரர் யாரும் இல்லை!
நிர்க்குணமாம் பரப்பிரம்ம
சொரூபம் ஒன்றே;
நீக்கமற நிலைபெற்று
நிகழ்ந்த தன்றோ!
கருந்து:
ஹே எம் ஆத்ம சொரூபா!
ஆதி மத்யானந்த ரஹிதா!
ஜோதி நித்யானந்த சொரூபா!
இது என்ன விசித்ரம் ஐயனே?
ஸத்குருவாக அருளியிடும் நீயும் இல்லை! ஸத்சீடனாகிய யாமும்
நாமரூபத்துடன் இல்லை! முக்குண சொரூபமாகிய, எந்த பிரிவினையும்
இல்லை! இவை அனைத்துக்கும் காரண காரியமாகிய ஜடகடபபாதிகள் எவையும் இல்லை. இவைகளை இயக்கும், அந்த மாயாவும் இல்லை!
குணதோஷங்களால், பின்னலிட்டு,
ஆர்ப்பாட்டம் செய்த, ஜகத் எனச்
சொல்லும், உலகமும் இல்லவே இல்லை.
அவ்வுலகத்தை, சிருஷ்டித்தோம்!
அவைகளை காத்தோம்! அவைகளை மாற்றி புதுப்பித்தோம்! எனச் சொல்லும் திரிகர்த்தாக்களையும் ஒருவரையாவது் காணோமே பிரபோ! அவர்களால்,
சிருஷ்டிக்கப்பட்டோம்,எனச் சொல்லும் மனித வர்க்கங்கள்! நடப்பன, பறப்பன, நீந்துவன, ஊர்வன! மற்றும் கிருமி கீடகங்கள், ஆகிய இவை அனைத்துமான ஜீவதோற்றங்கள் ஒன்றையும் நாமரூபத்துடன், எங்கும் காணோமே ஐயா!
சென்ற வினாடி வரை இருப்புடையதைப் போல் தோற்றியதே? இந்த வினாடி என்ன ஆயிற்று? அனைவரும் இருந்தார்களா? அல்லது மறைந்தார்களா? அல்லது ஓடி ஒழிந்து கொண்டார்களா? அப்படி ஒழியவும் ஓர் இடம் வேண்டுமே? அதுவும் இல்லையே?ஒருவேளை யாம் கனவுதான் கண்டோமா? இந்நிலையில் எமக்கு கனவும் வராதே! கனவு காணும் மனமும் இல்லையே? அல்லது இவை
அனைத்தையும், எவனாவது மாயாவி வந்து களவாடிச் சென்று விட்டானா?
அந்த மாயாவியும் எங்கு கொண்டு போவான்? எங்கிருந்து வருவான்?ஒரே ஆச்சர்யமாக இருக்கிறது.
கண்இமைகொட்டி முழிக்கும் நேரத்திற்குள், இருந்த தோற்றங்களும். நாமரூப ஜகங்களாகிய ஆகிய அனைத்தும் போன மாயங்களும், வரியில் எழுதவோ, வாக்கால் சொல்லவோ இயலவில்லை ஐயனே!
கோடி வந்தாலென்ன? கோடி போனாலென்ன? இனி நமக்கெதற்கு! நாம் நாமாகவே இருப்போம்!
எல்லாம் நீ!