ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 72

weblink


பாடல்: 72

சுருதி என்றும், ஸ்மிருதி என்றும்,
நூல்கள் என்றும்;
சூட்சுமமாம் வேதாந்த
நூல்கள் என்றும்;
புராணம் என்றும், கருதும்
இதிகாசம் என்றும்;
காமிகமே முதலிய
ஆகமங்கள் என்றும்;
ஒருமையென்றும், இருமையென்றும், ஒன்றுமில்லை!
உள்ளதெல்லாம் அகண்ட
பரப்பிரம்மம் தானாம்!
பரவிய அப்பரப்பிரம்மம்
நாமே என்று;
பாவித்து பாவித்து
பரமே ஆவாய்!

கருத்து:

வேத, சாஸ்திர, புராண, இதிகாச, ஆகம, அனுஷ்டான, ஆச்சார, விதி முறை கட்டுப்பாடு, அதிசூட்சும வேதாந்த நூல் முதலிய  இன்னமும் அனேக ஒருமையாகவும்! இருமையாகவும்! பலப்பலவாகவும்! பிரித்து, விரித்து சொல்லக்கூடிய அனைத்தும், காலாதீத பரத்திற்கு அன்னியமாய் இல்லவே இல்லை.

அவைகளை பிரித்து, விரித்து சொல்வதனைத்தும் மனோமய கற்பனையே! அவைகளை ஒன்றுபடுத்த, “எல்லாம் ஒன்றே! அது யாமே! யாமே அது! என அறிவது அறிவின் கூர்மை. அந்த மெய்யான பாவனையை, பாவித்து! பாவித்து! பாவித்து! பரமேயாவாய்!!!.

                        எல்லாம் நீ!

குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 72

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113