ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113
weblink
பாடல்: 113
குருவர நின் கருணையினால்
கண நேரத்தில்;
குறைவு தரும் பேதமதி
அனைத்தும் நீங்கி;
சர்வமுமே பிரம்மமென்னும் நிச்சயத்தை;
சாலவுமே திடமாக
சார்ந்தோமந்தோ!
பரவிய இவ்வுரமான
நிச்சயத்தால்;
பரமான எம்மிடையாம்
சாந்தமாகி;
விரவுபவ துக்கங்கள்
அனைத்தும் நீக்கி;
விமலபரம ஆனந்தம் அடைந்தோமந்தோ!!
கருத்து:
எம் ஆத்ம நாதா! ஸ்ரீஸத்குருதேவா! உன்னுடைய அபாரமான கருணையால் ஒரு வினாடியில், தேகாத்ம புத்தி நீங்கி பிரம்மான்ம அறிவு பிரகாசித்தது.
அந்த பிரம்மான்ம அனுபவத்தினால்,
எம் அறியாமையினால், எம் மனோசபலத்தால், எம்மைத் தொடர்ந்த,
நான் ஓர் பந்த ஜீவன் என்ற தளை (விலங்கு) உடைத்து எறியப்பட்டு யாமே பரமாத்மா! என்றபுருஷோத்தமன் ஆகிவிட்டோம்.
தாங்கள் கொடுத்த உபதேசப்படி, "அகம் பிரம்மம்; பிரம்மம் அகம்" (யாம் அது . அதுவே யாம்) என்ற அகண்ட பரபாவனை செய்ததாலே,
பவ பாச துக்கங்கள் அனைத்தும் தூக்கத்தில் கண்ட கனவு போல் மறைந்து விட்டது.
அதனால், மலமற்ற அமலமான மனமானது மஹத்தாகி,பரத்தில் கலந்து, கரைந்து மயமாகி, யாம்
அதுவாகவே இருக்கிறோம் ஐயா!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113