ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 130
weblink
பாடல்: 130
அஹோ குருவின் மஹிமையினை யென் சொல்வோம் யாம்!
அஹோ நூலின் மஹிமையினை
யென் சொல்வோம் யாம்!
அஹோ ஞான மஹிமையினை
யென் சொல்வோம் யாம்?
அஹோ ஞானி மஹிமையினை
யென் சொல்வோம் யாம்?
அஹோ ஸாது மஹிமையினை
யென் சொல்வோம் யாம்?
அஹோ ஸாந்தி மஹிமையினை
யென் சொல்வோம் யாம்?
அஹோ பிரம்ம சுகமஹிமையினை யென் சொல்வோம் யாம்?
அஹா சாது சுகமஹிமையினை
யென் சொல்வோம் யாம்?
கருத்து:
இப்பாடலில் எட்டுவிதமான அம்ஸத்தை சுட்டிக் காட்டுகிறார். அவையாவன?
1. ஸத்குருவின் பெருமை!
2. ஸத்குரு அருளும் நூலின் பெருமை!
3. ஆத்ம ஞானத்தின் பெருமை!
4. ஆத்ம ஞானம் பெற்ற அத்வைத ஞானியின் பெருமை!
5. ஸத் ஸாதுவின் பெருமை!
6. அவர் ஸ்வயமாய் அடைந்த ஸாந்தியின் பெருமை!
7. பரப்பிரம்மத்தின் பெருமை!
8. அந்த ஸ்வயஞாஜனுபவ நூலை படித்து, அதுவே நாம்! நாமே அது! என ஆனக் குழந்தைகளின் பெருமை!
இவர்களின் பெருமையினை ஆயிரம் சிரம் கொண்ட ஆதிசேஷனோ, திரிமூர்த்திகளாகிய லோக கர்த்தாக்களோ, வடி வடிவிலோ,
வாக்கு வடிவிலோ! கூற முடியாது. என்பதே ஸத்தியம்!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 130