ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 126
பாடல்: 126
செய்வோம்? எல்லாம்;
இருமை இல்லா நினது
நிஜ சொரூபம் தானே?
அன்னியமில்லா நீ யாமாய்!
யாமே நீயாய்!
அமர்கின்ற ஐக்கியமாய்
ஆழியின் கண்;
அனியுமகம் பிரம்மாஸ்மி
ஞானத்தாலே;
யாம் மூழ்கி ஒன்றாக
கலந்தோமன்றோ!
தனியுருவாய் தான் தானாய்
தனித்த இந்த;
தகைமைதனில் தனக்கயலோர் அணுவும் உண்டோ?
கருந்து:
ஓ எம் ஆனந்த சாகரா! ஆத்மானந்த சொரூபமே! பிரம்மானந்த வாரிதியே! இந்த நிலையில், உலகின் நிலையில், காணும் காட்சியில், நாம் இருவரும், இரண்டாக தோற்றின்லும், நாம் இருவரும் ஒருவரே! அதாவது, கனி இரண்டே! சுவை ஒன்றே! அதாவது, காணும் கனியின் உருவம் அழியும், சுவை நிலைத்து நிற்கும்.
நாம் இருவரும் இப்படி ஆன பின்பு இனி இங்கு கைமாறு என்ற பொருள் உண்டா? கைமாறு என கொடுக்கும் யாம் உண்டா? கைமாறு என்பதை வாங்கும் நீ உண்டா? இப்படி பகுப்பற்றுப் போய்விட்டோமே பிரபோ!!
இங்கும், அங்கும், எங்கும், இன்றும், அன்றும், என்றும், என்றென்றும், இருமை என்றும் இல்லையே ஐயா! உப்பு பதுமையாக இருந்த நம் தோற்றம் பிரம்மானந்த சமுத்திரத்தில் கரைந்து கலந்து விட்டதே ஐயா!.
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 126