ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 125

weblink


பாடல்: 125

நினதருளால் யாம் பெற்ற அனுபவத்தை;
நிகழ்வுறவே இவ்வண்ணம்
நிகழ்த்தலானோம்!
கனகருணாவாரிதியே!
யாம் உமக்கு;
கைமாறு செய்திட இங்கு ஒன்றுமில்லை!
மனதுடனே எமதுடலை உமக்களித்தோம்;
மற்றதனை நிமிஷத்தில்
நீறு செய்தாய்!
அனக எமதான்மாவை உமக்களித்தோம்;
அதனையும் நின் ஆன்மாவே
ஆக்கிக் கொண்டாய்!

கருத்து:

கருணாஸாகரா! ஸத்திய சொரூபா! சதானந்த வாரிதியே! ஆத்மானந்த சொரூபா! இது காலபரியந்தம் உம் கிருபையினால் யாம் பெற்ற எம் ஸ்வய
அனுபவங்களை தெள்ளம் தெளிவாக
உணர்வு பூர்வமாக, சொன்னோம்.

இந்த நிலைக்கு (ஜீவன் முக்திக்கு)
எம்மை ஆளாக்கிய, உமக்கு என்ன கைமாறு செய்வது என்றே
தெரியவில்லையே பிரபோ?

ஓ எம் ஐயனே! மனதின் பிடியில் இதுகால பரியந்தம் சிக்கியிருந்தோம். ஆனால், தாங்களோ எம்மை அந்த மாயா மனதின் பிடியிலிருந்து விடுவித்து அறிவின் சொரூபமாக்கி விட்டாய்!

எமது இருவினை (புண்ணிய பாப) உடலையும் எம் மாயா மனதையும் இணைத்து, உமக்கு அர்ப்பணம் செய்தோம்!

அடுத்த வினாடியே அவைகளை சாம்பலாக்கி விட்டாய்! ஜீவாத்மாவாக இருந்த யாம், உமது கிருபையினால் ஜீவகளை களையப்பட்டு ஆத்மாவாக
ஆனோம்!

அந்த ஆத்மாவையும், எல்லாம் நலமே!
என்றும், இருப்பது ஒன்றே! என்றும்,
நடப்பது நலமே! என்றும், இவை அனைத்தையும் இணைத்த நிலையில் எல்லாம் நீயே! என்றும், எம் ஆன்மாவை
உமக்கு அளித்தோம். அதனையும் உன் ஆன்மாகவே ஆக்கிக் கொண்டாய்! 

இப்போது, உணர்வு பூர்வமாக, உணரும்
நிலையில், நீ இன்றி யாம் இல்லை! யாம் இன்றி நீ இல்லை!! என ஆகிவிட்டோமே!

இங்கு இருமையென்று ஒன்றை காணவில்லையே! ஒருவர் என்ற
ஒன்றைத்தான் உணர முடிகிறது. (காண முடியாது, இயலாது)

                          எல்லாம் நீ!


குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 125

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113