ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 123

weblink

பாடல்: 123

சிரவணமே முதலியதின் அப்யாசத்தால்;
சிறுமை தரும் தேகாத்ம
புத்தி நீங்கி,
பெருமை மிகும் பிரம்மான்ம
புத்தி மேவி;
பின்பு அந்த புத்தியுமே
இழந்தோனாகி;
கருதவொண்ணா அகண்டான்ம
போதம் பெற்று;
கர்த்ருத்வ முதலான
பந்தம் தீர்ந்து;
நிரதிசய ஆனந்தம் அனுபவித்து,
நிகழ் ஜீவன் முக்தனும்
யாம் ஆனோமயா!

கருத்து:

நிகழ் ஜீவன் முக்தி என்றால் இயல்பாகவே தைலதாரை போல் நிலைத்த ஆனந்தம்!

சிரவண, மனன, அப்யாசத்தால், பலகால வாதனையால், ஊறிப்போன, "நான் உடல்! நான் குடும்பி! நான் இல்லையானால் குடும்பம் நடைபெறாது! நானே இவை அனைத்தையும் தேடினேன்! என்னால்தான் முடிந்தது!
என் குடும்பம்! என் பொருள்! இவை என்னுடையது!" என்ற தேகாத்ம புத்தி  நீங்கியது.

நானே கர்த்தா! என்ற ஜீவ கர்த்ருத்வம்! முழுமையாக நீங்கி அழிந்தது.

அது அழிந்த தன்மையினால், ஜீவாத்மாவாக இருந்த யாம்,
பரமாத்மா ஆனோம்! எம் நிதித்யாசம், முடிவுறும் பொழுது 
அந்த பரமாத்ம புத்தியும் எம்முள் ஒடுங்கிவிட்டது! அங்கு அறிவு 
சொரூபம், மேலும் பிரகாசித்தது.

அங்கு, எம்முடைய பேரறிவின் நிலையில், அகண்டான்மாவில்,
சர்வ சாட்சி ஆகி விட்டோம்.

அங்கு, ஈச கர்த்ருத்வமும் எம்முள்
ஒடுங்கிவிட்டது. (ஜீவ ஈச கர்த்ருத்வம் இரண்டுமே பந்தமாகும்).

இப்போது, அதிசயமே இல்லாத, பரப்பிரம்மானந்தம், அனுபவிக்கிறோம்.

இவ்வனுபவம், எம் அகண்டைகரஸ சொரூப அனுபவமாகும்.

குறிப்பு: ஜீவநிலை ஒன்றே புத்தி!
ஈச நிலை, பரமாத்ம நிலை, பரப்பிரம்ம நிலை, இவை அனைத்திலும், அறிவே படிப்படியாக உயர்ந்து மறைந்து விடும்.

மனம், புத்தி, சித்தம் என இம்மூன்றையும் மனம் என்றாலும், புத்தி என்றாலும், சித்தம் என்றாலும், அவை மூன்றீற்கும் பொருந்தும்.

நிலை கண்டு, இடம் கண்டு, அவற்றின் செயல்கள் மாறும் அவ்வளவுதான்.

1. சாதாரன மனிதன் அறியாமையில் ஜீவ நிலையில் இருக்கும் போது அவை, "மனம்" ஆகும்.

2. அதே ஜீவ நிலையில் படிப்பறிவின் நிலையில், அவை, "புத்தி" ஆகும்.

3. அதே ஜீவனானவன், பக்தி, ஞானும், இவைகளில் பயிற்சி பெற்று ஓர் பக்குவ ஆன்மா ஆகும்போது, "ஸித்சொரூப அம்ஸமான சித்தம்" என ஆகும்.

4. அப்பக்குவ ஆன்மாவானவன், பயிற்சியில் முதிர்ச்சி ஆகி, ஞானம் பெற தகுதி உடையவனாகி, கற்பனைகளை உடைத்தெறிந்து விட்டு, சித்தத்தை வென்று, அது ஸ்திரமாகும் போது, அதுவே, "ஸித்சொரூபமாகி" விடுகிறது.

5. அதே பக்குவ ஆன்மாவானவன், ஸித்சொரூபமாக இருந்து, ஸ்ரீசத்குரு உபதேசத்தை தைலதாரை போல் நிதித்யாசம் செய்து, நிதித்யாசத்தால் ஒர் நிலை பெறும் போது, அதுவே, ஆன்மா என்ற அறிவு சொரூபமாகி விடுகிறதென, ஸ்ரீமஹான்கள் சொல்கிறார்கள்.

தேகாத்ம புத்தியில், அதாவது, உடல் உலக நிலையில், இன்னார் என
அறிமுகப்படுத்துவதும்,

உடல் உலக, பொருள் நிலையில், கௌரவம், பட்டம், பதவி, புகழ், பணம், இவைகளின் மோகத்தில், சிக்கி, அவைகளை அனுபவிக்கும் நிலையின், நான் என்னால் என்ற வீராப்புடன், தன்னை அறிமுகப்படுத்துவதும்,
அஹங்காரம் ஆகும்.

இப்பாடலில், நிகாகன் கூறும் போது, இதில் கூறும் நான்கு நிலைகளையுமே சுட்டிக்காட்டி ஒன்று மறைந்தது! ஒன்று பிரகாசித்தது! பின் அதுவும் மறைந்தது! பின் மற்றோன்று பிரகாசித்தது! என வரிசைக்கிரமமாக சொல்கிறான்!

இதை ஒவ்வொருவரும், தம் தம் அனுபவத்தில் உணரலாம். அவை வாக்கு வரி வடிவத்தில் எட்டாததாகும்.

                        எல்லாம் நீ!


குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 123

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113