ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87
weblink
பாடல்: 87
நிரந்தரமாம் அறிவான
எம்மிடத்தில்;
நிகிலமுமே கற்பிதமாய்
தோற்றலாலே;
பொருந்திய அக்கற்பிதமாம் தோற்றமெல்லாம்;
பூரணமாம் அறிவான
அகமே என்றும்;
விரிந்த அறிவான அகம் பிரம்மமென்றும்;
வேறற்ற அபேத பர
ஞானத்தாலே;
அருந்தவனே! பேதமதி
அனைத்தும் தள்ளி;
அசஞ்சலமாய் ஆன்மாவில்
அமர்ந்து நிற்பாய்!
கருத்து:
அறிவே ஆன்மா!
ஆன்மாவே அறிவு!
அந்த அறிவு சொரூபமான எம்மிடமே இந்த நாமரூப ஜக ஜீவகோடிகள் தோன்றினர். ஊசி நாட்ட இடமில்லாமல் யாமே நிறைந்திருக்கிறோம்! எமக்கு அன்னியமாய், எவைகளும் இல்லவே இல்லை, என்ற அபேத பரபாவனையால், பேதமாக தோன்றும் அனைத்தையும் இல்லை! இல்லை! இல்லை! எனத்தள்ளி யாம் ஒன்றே!என்ற அகண்டான்ம பாவனையால், அசையாமல் இருப்பாயாக!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87