ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 122
weblink
பாடல்: 122
பின்னமறக் கருணையினால்
நீ உரைத்த;
"பிரக்ஞானம் பிரம்மம்"
முதல் வாக்கியார்த்தம்;
மன்னும் வண்ணம் நன்றாக
மனதில் கொண்டு;
மாசறவே மற்றதனை
மனனம் பண்ணி;
அன்னதனைப் பின்னையுமே அநுசந்தானிந்து;
அக்ஞான சந்தேக
விபரீதங்கள்;
மன்னியிடா அகண்டார்த்த
போதம் பெற்று;
மகிழ் "ஜீவன் முக்தனும்"
யாம் ஆனோமய்யா!
கருத்து:
ஸத்குருவார்யா! ஸத்யசொரூபா உன்னுடைய பரமகிருபையினால், பின்னலில்லாமல், பேதமில்லாமல்,
நீ உரைக்கும் உபதேசத்தால்,
"பிரக்ஞானம் பிரம்மம்" என்றும்,
ஆழ்ந்த கருத்தான, "தெய்வப் பிரக்ஞையோடு இரு" என்றும் "ஆத்மப் பிரக்ஞையோடு இரு" என்றும் "பரமாத்மப் பிரக்ஞையோடு இரு! என்றும், "பரப்பிரம்ம பிரக்ஞையோடு இரு! என்றும், நாமரூப, உடல் உலக, பிரக்ஞையோடு இராதே!
என்ற, அனுபவ வாசகத்தை, அப்படியே சிரத்தையோடு ஏற்று, அனுபவித்த தன்மைமையினால், சந்தேக
விபரீதமென்றும், அஞ்ஞான (கவனக்குறைவு) அகன்றது.
யாம் சாட்சி பாவனையில், வாக்கு ஆடும்போது மட்டும் சஞ்சாரம்
செய்வோம்! மற்ற காலங்களில், எம் யதார்ந்த இடமாகிய,
அகண்டபாவனை என்ற, "சர்வ சாட்சியில்" இருப்போம்!
தூல பாவனைக்கு செல்வதில்லை.
அது இருந்து, பலகாலம் ஆகிவிட்டது. இந்த அகண்டபாவனையில்
யாம் அனுபவிக்கும் நிலையே! எம்
ஜீவன் முக்தியின் இடமாகும்!
(பிராமணன் ஆன பின்தான் மகிழும் ஜீவன் முக்தி நிலை கிட்டுமென்று உணர வேண்டும்!)
எல்லாம் நீ!