ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 120
weblink
பாடல்: 120
ஆசிரியா! நீ அருளும்
உபதேசத்தால்;
ஆவரணம், விட்சேபம்
அனைத்தும் நீங்கி,
சாசுவத சுபாவமதாய்
சலியா ஸித்தாய்;
சதானந்த கனமாகிச் சகஜான்மாவாய்;
பேசவொண்ணா பேரொளியாய் பிரிவில்லாததாய்;
பெரிதுக்கும் பெரிதாகிப் பிரம்மான்மாவாய்;
ஈசன் முதல் எவையுமில்லா அகண்டமான;
ஏகசிதா காயபர
பிரம்மமானோம்!
கருத்து:
ஹே பராத்பரா! பரமதயாளா!
உம்முடைய கருணையின் கனிவான உபதேசத்தால், ஜகத், ஜீவ, ஈஸ்வராதிகளில், நாம ரூபமான, ஆவரண மயக்கமானது, சிப்பியில்
வெள்ளி தோற்றி எப்படி மயக்குமோ, அவ்வாறு தோன்றி மயக்கிக் கொண்டிருந்தன அனைத்தும்,
அம்மயக்க போதை நிவாரணமாகி விட்டதால் நீங்கிவிட்டது.
அதாவது, மேலே கூறியவைகள்,
இருந்தாலும், இல்லாமல் போனாலும், என்ன ஆகுமோ? எது ஆகுமோ? என்ற கலக்கமான விட்சேப பயம் விட்டது.
அது எப்படி என்றால், எல்லாம் மண்ணே! இத்தூலமும் மண்ணே! என உணர்ந்தோ
ஓர் அடியாம்பாடியது போல்,
இக்காலமும் மண்ணே என உணர்ந்தோம்.
ஓர் அடியார் பாடியதை போல, மண் ஆசை பட்டேனே! மண் உண்டு
போட்டதடா என்ற நிலையில், மண், மண்ணானது, மண் பரமானது!பரம் யாமானோம்! யாமே பரமானோம்!
இந்த அனுபவம், எமக்கு எப்படி அனுபவம் ஆகிறது என்றால்? உம் கிருபையால்,சர்வ சதா, சலிக்கின்ற மனதை, பிரம்மான்ம பாவனையில் நிறுத்தினோம்! அந்த வினாடியே! எம் இயலபான சகஜான்மாவாய் ஆனது!
அந்த வினாடியே, வரி வடிவிலோ, வாக்கு வடிவிலோ, விளக்க கூடியது அகண்ட பேரொளியாய் பிரிக்க முடியாத, பினைந்து கலந்த,
ஒன்றாய், பெரியவைகட்கெல்லாம் மிக மிக, மிக, மிக, மிக, பெரியதாகிய பிரம்மான்மாவாய் ஆனோம்.
இந்த நிலையில், அங்கு எந்த கர்த்தாக்களும் இல்லாத, நாம ரூபமில்லாத, எம்மிடமே
யாமே கலந்து கரைந்து மயமானோம்!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 120