ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 119
weblink 
பாடல்: 119
இருமையெனப் பிரம்மமல்லாது எவையும் காணோம்!
இருப்பதெல்லாம் பரப்பிரம்ம
வடிவாய் கண்டோம்!
ஒருபொருளும் பிரம்மமல்லால் அயலாய்க் காணோம்!
இருப்பதெல்லாம் பரப்பிரம்ம
வடிவாய்க் கண்டோம்!
சர்வமெனப் பிரிதாகச்
சிறிதும் காணோம்!
சகலமுமே பரப்பிரம்ம
வடிவாய்க் கண்டோம்!
குருவரா! அப்பரப்பிரம்மம்
யாமே ஆனோம்!
குறைவற்ற நினதருளின்
மஹிமை என்னே?
கருத்து:
"இருமை" என்றால் ஒன்று பிரம்மம்; மற்றொன்று யாம்! என உணர்ந்த நிலையில், அனைத்தும் என்ற எல்லா நாம ரூபங்களையும் இல்லாமல் செய்தோம். இது அகண்டான்ம பாவனை என்ற சர்வசாட்சி நிலையாகும்!
பின், எம் ஸ்வய அனுபவத்தால், அவ்விருமையையும் தள்ளி அதுவே யாம்! யாமே அது! என்ற பிரம்மான்ம பாவனையை, ஒன்றாக உணர்ந்த நிலையில் எமக்கு அன்னியம் எதுவுமில்லாத, அதுவே யாமானோம்!
ஆகவே, இருப்பதெல்லாம் (இருப்புடையதாக தோற்றுவதெல்லாம்) எமக்கு அயலாக இல்லையென, உணர்ந்தோம்!
ஒரு பொருளாவது பிரம்மம் என்ற எமக்கு அயலாக இல்லவே இல்லை! அங்கு, காண்பதோ, கேட்பதோ, பேசுவதோ, அனைத்தும் பிரம்மம் என்ற, யாமே ஆனோம்!
"நீயும் யாமும் கனி காண்” என்ற நிலையில், கனி இரண்டாக தோற்றினாலும், இருப்பது ஒரு சுவைதான்? என உணர்ந்த நிலையில், பிரம்மமாகிய யாம் அதுவாகவே இருக்கின்றோம்!
                           எல்லாம் நீ!
 
   
   
 
