ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 116

weblink

பாடல்: 116

நினதருளால் மனதிலுள்ள சந்தேகங்கள்;
நிகிலமுமே நிமிஷத்தில் நீங்கிற்றன்றோ!
நினதருளால் மனதிலுள்ள பவபாசங்கள்;
நிகிலமுமோர் நிமிஷத்தில் நீங்கிற்றன்றோ!
நினதருளால் ஜீவ பர ஜகங்களென்ன;
நிகழுமயல் நிகிலமுமே நீங்கிற்றன்றோ!
நினதருளால் நிகிலமுமே பிரம்மமென்றும்:
நிச்சலமாம் நிச்சயமே
நிலைத்ததன்றோ!

கருத்து:

ஹே ஸத்குருதேவா!
ஹே ஸத்தியசொரூபா!

உம்முடைய கருணையினால், மனோமய கற்பனையால் உண்டான
குற்றங்களும்! சந்தேகங்களும்!
சொந்த பந்த பாச பிணைப்புகளும், நாம, ரூப, ஜகத், ஜீவ, ஈஸ்ராதிகளின், மயக்க கலக்க பயமும்! அனைத்தும் முமுமையாக ஒழிந்தன!

அத்தன்மையினால்,
நாம ரூப ஜகம் ஜீவ ஈஸ்வராதிகள் அனைவரும், நாம ரூப குணம் குறி அற்ற நிலையில், அதுவாகவும்! அதுவே யாமாகவும்! இருக்கின்றோம்!

                            எல்லாம் நீ!


குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 116

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113