ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 115
weblink
பாடல்: 115
யாம் முன்னம் அறிவிலனாய்
அலைந்து நின்றோம்!
யாம் இன்று ஆன்மாவென்று அறிந்தோம் ஆனோம்!
யாம் முன்னம் தேகமென
இயங்கி நின்றோம்!
யாம் இன்று திருக்குருவென்று
அறிந்தோம் ஆனோம்!
யாம் முன்னம் சித்தம் எனச்
சலித்து நின்றோம்!
யாம் இன்று ஸின்மயமென்று அறிந்தோம் ஆனோம்!
யாம் முன்னம் சிதாபாசன்
எனவே நின்றோம்!
யாம் இன்று ஸித்பரமென்று அறிந்தோம் ஆனோம்!
கருத்து:
குருவரா நினதருளால்;
சென்ற வினாடி வரை, புத்திசாலியாய் இருந்தோம்.
இந்த வினாடியே, "அறிவாளி" ஆகிவிட்டோம்!
சென்ற வினாடி வரை, தேகாத்ம புத்தியோடு இருந்தோம்.
இந்த வினாடியே, "பரமாத்மா யாம்" என ஆகி விட்டோம்!
சென்ற வினாடி வரை, கற்பனையின் சித்தமாக இருந்தோம்.
இந்த வினாடியே, "ஸித் சொரூபமாகி" விட்டோம்!
சென்ற வினாடி வரை, சித்தத்தால் பொதிந்த ஜீவனாக இருந்தோம். இந்த வினாடியே, "சித்த மலமறுத்த சுத்த சிவமாக" இருக்கின்றோம்!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 115