ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 114
Weblink
பாடல்: 114
இதுவரையில் அஞ்ஞான
பகையால் கெட்டோம்!
இன்றுனது கருணையினால்
அபயம் பெற்றோம்!
இதுவரையில் மனதென்னும்
பகையால் கெட்டோம்!
இன்றுனது கருணையினால்
மஹத்தே ஆனோம்!
இதுவரையில் கருமியென்றும்
மதியால் கெட்டோம்!
இன்றுனது கருணையினால்
கலக்க மற்றோம்!
இதுவரையில் ஜீவனென்னும்
மதியால் கெட்டோம்!
இன்றுனது கருணையினால்
சிவமே ஆனோம்!
கருத்து:
எம் ஸத்யசொரூபா! ஸத்குருவார்யா!
சென்ற வினாடி வரை அஞ்ஞான இருள் மூடி இருந்தது!
இந்த விடியே ஞான சூரியனால் அந்த இருள் அகன்றது!
சென்ற வினாடி வரை, மாயா மனம் ஆட்டிப் படைத்தது!
இந்த வினாடியே, ஆடிய மனம் அழிந்து மஹத்தானது!
சென்ற வினாடி வரை இருகிய
மனதால் கெட்டோம்!
இந்த வினாடியே, கலக்க பயமற்று ஆனந்தம் அடைந்தோம்!
சென்ற வினாடி வரை யாம்
"ஜீவாத்மா" என்றே இருந்தோம்!
இந்த வினாடியே, "சுத்த சிவம்"
என ஆனோம்!
எல்லாம் நீ!