ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 111

weblink


பாடல்:111

தேசிகா! உன் கருணையினால்
யாம் அடைந்த;
திவ்வியமாம் சுயஅனுபவ
திருஷ்டி தன்னில்;
பேசியிடும் யாமும் இல்லை!
நீயும் இல்லை!
பெருமையுடன் பேசிய இந்த
இந்த நூலும் இல்லை!
பாசமுறும் ஜீவன் இல்லை
ஈசனில்லை!
பகுப்புற்ற பார் முதலாம்
ஜகத்தே இல்லை!
ஆசிரியா! அகிலமுமே
அகண்டாகார;
அத்வைத பிரம்மமல்லால்
அயலே இல்லை!

கருத்து:

ஹே கிருபாஸாகரா! உம்முடைய ஆழ்ந்த உபதேசத்தினால், எம்முடைய ஜீவத்வம் என்ற தேகாத்ம புத்தி (தேகம் நாம் என்ற மயக்க போதை) நசித்து விட்டது. ஆத்ம பாவனையின் அறிவு பிரகாசித்து விட்டது. ஆகவே "நூல் ஆகிய பரமாத்மாவும்"! "யாம் ஆகிய ஜீவாத்மாவும்"! "நீ ஆகிய பரசொரூபமும்! (அஸிபதமும்)
ஒன்றாக இணைந்து, இம்மூன்றும் நாம ரூபங்களை இழந்து, "அதுவாகவே யாம் இருக்கிறோம்"!

யாம் அதுவாக இருக்கும் நிலையில்,
ஜக, ஜீவர்கள், நாம ரூப. சொரூப, குண இயக்கங்களாக, காண முடியவில்லையே எம் ஐயனே!

மேலே கூறியவர்களையும், ஜட கட படாதிகளையும், நாங்களே உண்டு பண்ணினோம் என்றும், நாங்களே, காத்து ரட்சிக்கிறோம் என்றும், அவைகளின் நிலைகள் மறைத்து மாற்றி அமைக்கிறோம் என கூறும் திரிகர்த்தாக்களையும், சூட்சுமமான
எந்த நாமரூப இயக்கங்களாகவும், காணோமே பிரபோ! மேலே கூறிய இவை அனைத்தும், எங்கு ஓடிஒளிந்து கொண்டார்களோ தெரியவில்லையே? எங்கு நோக்கினும், யாமே நிறைந்திருக்கிறோம்! இங்கு அன்னியமாய் எந்த ஒன்றையும் காணோம் தேவாதி தேவா!

                         எல்லாம் நீ!

குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 111

Comments

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 86

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 76