ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 110


பாடல்: 110

கருணையினால் அருளிய
நின் உபகாரத்தில்;
கைமாறு இவ்வுலகில்
எங்குமில்லை!
குருபரனே உமது பயபாத
(இ)ப்போதைக்கு;
குறித்தடியேன் அனந்தவித வணங்கல் செய்வோம்!
பரிவுடனே வணங்குதலும்
உபசாரம் தான்!
பரமார்த்த தசையிலொரு
வணங்கலுண்டோ?
சருவமுமே பிரம்மமல்லால் பரமார்த்தத்தில்;
சற்றுமொரு பேதமுமே
இல்லையன்றோ!

கருத்து:

உம் கருணையின் உபகாரத்திற்கு,
கைமாறு செய்ய எம்மிடமும், இவ்வுலகிடமும், ஒன்றும் இல்லை!
இந்நிலைக்கு, ஆளாக்கிய, உம்மை வணங்கத்தான் முடியும்,
வேறொன்றும் செய்வதற்கு இல்லை. அப்படி வணங்கினாலும், அதுவும் உபசாரம் தான்!

அதுவும் உண்மைக்கு, பொருந்தாதுதான் காரணம்?
பரமார்த்தத்தில், வணக்கம் செய்பவரும், வணக்கம் பெறுபவறும் இல்லை. இது பேதாபேதம் அற்ற நிலையாகும்!

                            எல்லாம் நீ!

குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 110

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113