ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 109
weblink
பாடல்: 109
அறியவொண்ணா பெருமையுறும் போதம் பெற்ற;
குருதேவா! நினது திட
கருணையாலே;
சிறியமதி பொருந்திய யாம்
சிறுமை நீங்கி;
சின்னமில்லா அகண்ட பரிபூரணமானோம்!
பெற அரிதாம் உன்னுடைய தரிசனத்தால்;
பிறவி இதில் பெறுவதெல்லாம் பெற்றோன் ஆனோம்!
உற அரிதாம் உனதருளால்
செய்வதெல்லாம்;
ஊனமறச் செய்து
முடித்தோனும் ஆனோம்!
கருத்து:
ஹே பிரபோ! தயாநிதி! தங்கள் தரிசனம் கிடைக்கும் முன்பு வரை பாஷாண்டியாய் அலைந்து கொண்டிருந்தோம். தங்கள் தரிசனத்தால் எந்த சமயச் சின்னமும் இல்லாத பரிபூரண நிலையை, பெற்று விட்டோம். போகம் எனச் சொல்லும், ஆத்ம ஞான போதம் எமக்கு அனுபவம்
ஆன பின்தான், யாம் பிறந்த பிறவிப்பயனைப் பெற்று விட்டோம்!
குற்றம், குறையற்ற, பேதம் நீக்கப்பட்ட, ஸ்வயமான, எமது ஆன்மாவை, உணரப்பெற்றோம். மனம் படைத்த ஒரு மனிதன் எப்படி மனதை இல்லாமல் செய்ய வேண்டுமோ, அதை குறைவில்லாமல், நிறைவாக செய்து, முடித்துவிட்டோம்!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 109