ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 107
weblink
பாடல்: 107
நிச்சலமாம் நிச்சயமே
அகண்டானந்த;
நிலைமை பெற நிகரற்ற
ஏதுவாகும்!
உச்சமதாம் நிச்சயமே
செய்ய, செய்ய;
உலகு முதல் துவைதத்தின்
தோற்றம் நீங்கும்!
துச்சமதாம் துவைதத்தின்
தோற்றம் நீங்கில்;
துகளற்ற ஆனந்தம்
சுயமாய் தோற்றும்!
அச்சமில்லா நிச்சயமே
செய்ததாலே;
அகண்டபரமானந்தம்
அடைந்து வாழ்வாய்!
கருத்து:
ஜக ஜீவ, ஜட கட படாதிகளின் நாம ரூபம் அனைத்தும், எம் மாயாவினால் தோன்றிய எம் மாயா மனதின் விளையாட்டே!
மேலே கூறிய அனைத்தும், எம்முள்ளேயே தோன்றி எம்முள்ளேயே விளையாடி, எம்முள்ளேயே மறைந்து
விடுகின்றன. ஆகவே, எமக்கு அயலாக எதுவுமே இல்லவே இல்லை. யாம் என்றென்றும் பரிபூரணனே! என்ற உறுதி நிச்சயத்தால், இந்த துவைத பிரபஞ்சமானது படிப்படியாக மறைந்து விடும். மறைந்து விடும் என்றால், அதை எண்ணும் மனம் எம்மிடம் இல்லாமல் போகும்.
ஆகவே, நாம ரூப பிரபஞ்சமும் இல்லாமல் எமக்கு மட்டும் மறைந்து விடும். யாம் அதுவாகவே இருப்போம்! இல்லை இல்லை, இருக்கிறோம்!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 107