ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 106

weblink

பாடல்: 106

தன்னிடையே தானாக
தனிப்பதற்கு;
தமக்கயல் போல் தோற்றியிடும் தோற்றமெல்லாம்;
அன்னியமாய் ஒருகாலும்
இல்லையென்றும்;
அகிலமுமே ஆன்மாவாம்
அது நாமேயென்றும்;
பின்னமில்லா அகண்டபர
நிச்சயத்தை;
பெறுவதுவே காரணமாம்
ஆதலாலே;
பன்னியவாறு அகண்டபர
நிச்சயத்தை;
பற்றியதால் பகுப்பற்ற
பரமேயாவாய்!

கருத்து:

முன் பாடலில், யாம் கூறியபடி
தன்னில் தான் நிலைத்து, தாம் தானாய்
இருப்பதற்கு, ஒரே உபாயம் இதுவே!

ஜக, ஜீவ, ஜட கட படாதிகள்
அனைத்தையுமே, குற்றம் குறை காணாமல், பேதமாக உணராமல், விருப்பு வெறுப்பு கொள்ளாமல்,
இம்மாயா கார்யமானது இல்லாத ஒன்றாக இருந்தாலும். இருப்புடைதை போல் தோன்றுவதால், திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி, விகிதாச்சாரப்படி பாரபட்க்ஷ தோஷம்
இல்லாமல், மாயாவும், மனமும் முறையே ஆடிக்களித்தும், ஆட்டிக் கழித்தும் நடைபெறும், அனைத்து நிகழ்ச்சிகளும், எம்முள்ளேயே நடைபெறுகிறதேயன்றி, எமக்கு அயலாக இல்லவே இல்லையென்ற திட உறுதி குன்றாமல், யாமோ அசங்கன்!
யாமோ அமலன்! யாமோ நிர்விகாரி!யாமோ நிர்தொந்தன்! யாமோ அசேதனன்! யாமோ என்றென்றும் பரிபூரணன்! என அசைவற்று ஆனந்தமாக இருப்பதுவே தன்னில் தானாய் நிற்பதாகும்!                  

                            எல்லாம் நீ!

குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 106

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113