ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 104

weblink

பாடல்: 104

நாமம் உரு யாவையுமே
பிரம்மமென்றும்;
நாம் அந்த பரப்பிரம்மம்
தாமே என்றும்;
சேமமுறச் செப்பிய
இவ்வர்த்தம் தன்னில்;
சிறிதேனும் சங்கை இல்லை ஸத்தியம்தான்!
நாமமெல்லாம் கடந்தெங்கும்
நிறைவாய் நின்ற;
தத்துவமாம் சிவம் ஆணை:
உண்மை சொன்னோம்!
ஆம் அல என்றணுவும்
இதில் சங்கியாமல்;
(யாம்) அறைந்த வண்ணம்
அதிதிடமாய் நிச்சயிப்பாய்!

கருத்து:

அகில புவனங்களாயும், அனைத்து ஜீவ கோடிகளாயும், ஜட கட என்ன படாதிகளாயும் தோன்றும், அனைத்து நாமரூபங்களும் காலாதீத அந்த ஒன்றுக்கு அன்னியமாக இல்லை! இது ஸத்தியம்!

மண்ணில் பாண்டம் இல்லை! மண்ணில்லாமல் பாண்டம் இல்லை! இல்லை!! இல்லை!! இல்லை!!!

இதை எம் ஸத்குரு மீது ஆணையிட்டு கூறுகிறோம்! ஆம் என்றோ, அல்ல என்றோ இரண்டுபட்ட தன்மையினால் சந்கேகம் இல்லாமல் திட உறுதியினால் நம்புவாயாக!

                        எல்லாம் நீ!


குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 104

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113