ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 103
weblink
பாடல்: 103
சர்வமுமே பரப்பிரம்ம
சொரூப மென்றே;
சகலமறை முடிவுகளும்
சாற்றவாலும்;
பிரிவுறவே பரப்பிரம்ம
ஞானம் பெற்ற;
பெரியோரும் இவ்விதமே
பேசலாலும்;
இருளறவே பரசிவமும்
எமக்கு முன்னம்;
இவ்விதமே அருள் செய்த இயல்பினாலும்;
உரைதரும் இவ்வகண்டபர
நிச்சயத்தில்;
ஓரணுவும் ஐயமில்லை!
உறுதி ஈதே!
கருத்து:
வேத வேதாந்த சாஸ்திரங்களும், முடிவில் பிரம்மஞானத்தையே முடிந்த முடிவாக, சொல்வதனாலும் தன்னை அறிந்த ஸ்ரீமஹான்களும் அதையே புகழ்வதாலும், எம் ஸ்ரீ ஸத்குருதேவரும், அந்த ஒன்றையே உபதேசித்ததாலும், அஞ்ஞான இருள் அகல அவ்வொன்றே,
உரிய மார்க்கமாகும்! நம்பிக்கையே உன் பலம்! நம்பிக்கையே உனக்கு பலன்! அதுவே நீ!
எல்லாம் நீ!