ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 102
weblink
பாடல்: 102
புரையற்ற நிருபாதி
சொரூபம்தானே;
புகலும் மஹாவாக்குகளின் பொருளாமன்றி;
பிரிவுற்ற சோபாதி
சொரூபமென்றும்;
பேசும் மஹாவாக்குகளின் பொருளன்றன்றே!
விரிவுற்ற இவை முதலாம் தோற்றமெல்லாம்;
விமலமதாம் பரப்பிரம்ம
சொரூபமென்றே;
தெரிவுற்ற அகண்டபர
நிச்சயத்தால்;
இயக்கமில்லா பரப்பிரம்ம மாத்திரமாவாய்!
கருத்து:
காலாதீத அந்த ஒன்று குற்றம் குறையற்ற, பேதமற்ற, எந்தவித, உபாதைகளும் இல்லாத நான்கு மஹா வாக்கியங்களின் பொருளாகும். பிரிவினைப்படுத்தக்கூடிய சோகம், மோஹம், பயத்தை கொடுக்கக் கூடிய எந்த வாக்குகளும், அந்த காலாதீத ஒன்றை உணர்த்த முடியாது என்பதே ஸத்தியம். ஆகவே விரிவாக காணக்கூடிய அனைத்தும், அந்த எந்த நாம ரூபமும் இல்லவே இல்லை. ஆதலினால், அனைத்தும் அந்த ஒன்றுக்கு, அன்னியமில்லையென்றும் அதுவே நாம்! நாமே அது! என்ற அகண்டான்ம பாவனையால் சும்மா சுகமா இரு!
எல்லாம் நீ!