ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 97


பாடல்: 97

அகம்பிரம்ம பாவனையால்
மாயா மோஹம்;
அகிலமுமே நசிக்கும்
இதில் ஐயமில்லை!
அகம்பிரம்ம பாவனையால்
மனக்கிரந்தி;
அகிலமுமே நசிக்கும்
இதில் ஐயமில்லை!
அகம்பிரம்ம பாவனையால்
ஆதி வியாதி;
அகிலமுமே நசிக்கும்
இதில் ஐயமில்லை!
அகம்பிரம்ம பாவனையால் அத்தியாசம்;
அகிலமுமே நசிக்கும்
இதில் ஐயமில்லை!

கருத்து:

அகம் பிரம்மம்! ஜகம் பிரம்மம்!
அகமே எல்லாம்! (நாம் அதுவே! அதுவே நாம்! நாமே எல்லாம்!) என்ற, அகண்டான்ம பாவனையால்
மாயா கலக்க பயம் நசிக்கும்!
மனமுடிச்சு எனச் சொல்லப்படும் ஆகாமிய வினை நசிக்கும்! சஞ்சிதமும் அதன் கற்பனையும் நசிக்கும்!
சந்தேக குற்றம் குறை பேதம் நசிக்கும்!
அதுவே நாம்! நாமே அது! நிலைக்கும்!

                          எல்லாம் நீ!

 குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 97

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113