ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 99

weblink

பாடல்: 99

அகம் பிரம்மம் என்று உரமாம் நிச்சயித்து;
ஆக்கை முதல் அகமென்னும் நினைவைத் தள்ளு!
ஜகம் பிரம்மம் என்று உரமாம் நிச்சயித்து;
ஜகத்தை யெல்லாம் உண்மை யென்னும் நினைவைத் தள்ளு!
அகம்பிரம்மம், ஜகம்பிரம்மம்
என்றிவ்வண்ணம்;
அனவரதம் தொடர்பாக
நிச்சயித்தால்;
ஜகம், பரம், நாம் என்னும்
மயல் துயில்வோன் கையில்;
செறிகின்ற மலரெனவே
சுயமாய் நீங்கும்!

கருத்து:

அதுவே நாம்! நாமே அது! என உறுதியான நிச்சயமே, தேகாத்ம புத்தியை நாசம் செய்யும்! எல்லாம் ஒன்றே! ஒன்றே எல்லாம்! என்ற
அகண்ட பரபாவனையானது, குற்றம் குறை, பேதம், விருப்பு, வெறுப்பு, முதலான, தோஷ குணங்களை நாசம் செய்யும், அகம்பிரம்மம்; ஜகம்பிரம்மம்; அகமே எல்லாம்! என்ற உறுதி நிச்சயத்தால், நன்றாக தூங்குபவன் கையில் உள்ள மலரானது, எப்படி அவன் கையை விட்டு நழுவி விழுமோ அப்படி  நாம ரூப ஜக தோற்றம், இவன் சாதனையை அனுசரித்து மறைந்து விடும்.

ஜகம் மறையும் என்றால், ஜகமே இல்லாமல் மறைந்து விடும் என்பதல்ல! மற்றவர்கள் கண்களுக்கு ஜகம் தோற்றும்.
உனக்கு கோரகுணங்கள் முதலில் மறையும். பின் அனைத்து நாமரூப இயக்கமும் ஒர் படக் காட்சி போல் நடந்து கொண்டிருக்கும். (அதில்
உன் மனம் பதியாமல், உணர்ச்சியற்று, விழி கண் குருடு போல், விகாரமற்று தோற்றும்.

அதாவது, பொம்மைகள் ஆடிக்களிக்கும் காட்சியாகவும், ஒலி அலைகள்  ஒன்றுடன் ஒன்று மோதும் காட்சியாகவும்,
தோற்றும். அங்கு விகாரமும் விவகார சம்பந்தமும் அவஸ்யம்
இராது! "செத்தாரைப் போல் திரிவான் சகஜ ஞானி ” என்பதை போல, அந்த தூலம் பிராரப்தம்
உள்ள மட்டும், சஞ்சாரம் பண்ணும்.
பிராரப்தம் முடிந்தால் தூலம் மண்ணோடு மண்ணாகும். ஆனால்
நீயோ பரத்தோடு பரமாவாய்!

                       எல்லாம் நீ!


குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 99

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 130

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113