ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 98

weblink
பாடல்: 98

சர்வமுமே பிரம்மமென
போதித்தாலும்;
சந்ததமும் சுருதிமுடிப்
படிப்புற்றாலும்;
பரம சிவம் கருணயில்லா
வெறும் மூடர்க்கு;
பலகால வாதனையால்
மீ‌ண்டு‌ம் மீண்டும்;
இருமையென இதயத்தில்
தெரிவதன்றி;
யாவையுமே பிரம்மமெனத் தெரிவதில்லை!
அரியவனே! ஆதலினால்
முமூட்சுவெல்லாம்;
அகண்டபர சிவகருணை
அடைய வேண்டும்!

கருத்து:

வேதம், சாஸ்திரம், உபநிஷதம்,
வேதாந்த பாடங்கள், சுத்த
அத்வைத நூல்கள் ஆகியவற்றை விழுந்து விழுந்து படித்தாலும், நெட்டுருப் போட்டு, இரவு பகலாய் சிரவணம் செய்து வந்தாலும்,
அங்கு ஸ்ரீ பகவான் கருணையில்லையானால் ஓர்மை தோற்றாது. இருமை ஒழிவதில்லை! காரணம், வினைத்தூலம் புண்ணிய பாப சம்பந்தமான ஸ்ரீ பகவானுடையது. அதை, அவன் ஏற்காமல் மனம் மஹத்தாகாது! மனம் மகத்தாகாமல், ஜீவன் முக்தி இல்லை. இது பிரமாண உண்மை!. ஆகவே, அவஸ்யம் ஸ்ரீ பகவான் கருணை பெற வேண்டும்!

                           எல்லாம் நீ!


குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 98

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113