ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 100
weblink
பாடல்: 100
வானமுதல் பூதமில்லை;
புவனமில்லை!
வகுக்கின்ற ஈசனில்லை;
ஜீவனில்லை!
யாமும் இல்லை; நீயும் இல்லை!
யாரும் இல்லை!
நாமமில்லை; ரூபமில்லை;
என்றும் எல்லாம்;
ஞானகளமான
பரப்பிரம்மமென்றே;
ஞானநிலை பெறுமளவும் நிச்சயித்தால்;
பானமுறும் பேதமயல்
பாதவத்தின்;
பக்குவத்தின் பழமெனவே
சுயமாய் நீங்கும்!
கருத்து:
பஞ்ச பூதங்களோ, அகில கோடானுகோடி புவனங்களோ, இல்லவே இல்லை. அவைகளை
நாங்கள் பரிபாலிக்கிறோம், எனச் சொல்லும், திரிகர்த்தாக்களும் இல்லவே இல்லை. இவைகளை முறையோடு போதிக்கின்ற நாமும் இல்லை. இவைகளை சிரத்தையுடன் கேட்கின்ற மாணாவனான நீயும்
இல்லை! இதுவரை சொல்லிய
அனைத்தும் எந்த நாமரூபமுமாக இல்லை. எல்லாம் அதுவாகவே இருக்கிறது! அதுவே யாம்! யாமே அது! என்பது நிதித்யாச அனுபவ நிலையில், தெளிவானால், மரந்தில் பழுத்த பழமானது, அம்மரத்தை
விட்டு இயல்பாகவே வெளியேறி விடுமோ, அதே நிலையில், இந்த நாமரூப ஜகமானது முன் பாடலில், கூறியபடி தானே விலகிக் கொள்ளும்! நீ அதுவாகவே இருப்பாய்! உனக்கு அன்னியமாய் எதுவும் இராது!
எல்லாம் நீ!