ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 93
weblink
பாடல்: 93
சேத்தியமாய் செறிவுற்ற தோற்றமெல்லாம்;
ஸின்மாத்ரமான
பரசிவமே என்றும்;
வேத்தியமோர் அணுவுமில்லா
சிவம் நாம் என்றும்;
வேறற்ற நாம் அந்த
சிவமே என்றும்;
சாத்தியமாம் பாவனையால்
அகண்ட போதம்;
சார்ந்ததனால் சம்சார
பாசம் நீங்கி;
நேத்திரமாம் பரமசிவ
அபின்னமான;
நினதான்ம மாத்திரமாய்
நிலைத்து நிற்பாய்!
கருத்து:
சொந்த பந்த பாச உறவு நட்புகளாய் தோன்றும், அனைத்து நாம ரூபங்களும், ஆன்ம சொரூபமாகிய எமக்கு அன்னியமில்லை!
யாமே அனைத்துமாக இருக்கிறோம்!
எல்லாம் எமக்குள்ளேயே அடங்கி, ஒடுங்கி இருக்கின்றன!
என்ற இயல்பாகவே நமக்கு சாதகமான, பாவனையான அகண்டானந்த பாவனையால் பின்னமில்லாத எம்முள் யாம் நிலைத்து, சம்சாரி என்ற குடும்ப பாவனையை தள்ளி, யாம் யாமாகவே இருக்கிறோம்! என உணர்ந்து அமைதியும் ஆனந்தமும் பெறுவாயாக!
எல்லாம் நீ!