ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 94

weblink

பாடல்: 94

மனது முதல் அனைத்திற்கும் அதீதமாகி;
மாயை மஹதாதிகட்கும்
அதீதமாகி;
நனவு முதல் அவஸ்தைகட்கும்
அதீதமாகி;
நாமம் உரு எவைகட்கும்
அதீதமான;
அகண்டபரப்பிரம்மமல்லால் அணுவுமில்லை!
அகிலமுமே அகண்டபரப்பிரம்மமென்றும்;
கன அறிவாம்,
பரப்பிரம்மம் நாமே என்றும்;
கலங்காத பாவனையால்
மனதை வெல்வாய்!

கருத்து:

மனதின் கற்பனையான எண்ணங்களுக்கு அதீதமாகவும், மாயாவின் மஹத்தான
சக்திகளுக்கு அதீதமாகவும், ஜாக்ரத, சொப்ன, சுழுப்தி, முதலிய அவஸ்தைகளுக்கு அதீதமாகவும், ஜகத் ஜீவ ஈஸ்வராதிகளில், நாம ரூபங்களுக்கு அதீதமாகியும், மேலே கூறியவைகளுக்கு ஆதாரமாகியும், ஆதரவாகியும், ஆகாரமாகியும்,
திரை அல்லாமல் எப்படி காட்சியில்லையோ, அந்த நிலையில் உள்ள ஸத்தியமான பிரம்மமல்லால், வேறு அணுவும்
இல்லையென்றும், கலக்கம் இல்லாத அறிவால் அறிந்து  சந்தேக கலக்க பயத்தை நீக்கி, கள்ள மனதை வென்று, அதுவே நாம்! என ஆகுவாயாக!

                         எல்லாம் நீ!


குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 94

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113