ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 92

weblink



பாடல்: 92

கற்பிதமாம் ஜீவபர
உபாதி யெல்லாம்;
களங்கமற விசாரித்து
நேதி செய்து;
தற்பத லட்சியமான
பிரம்ம ரூபம்;
த்வம்பத லட்சியமான
நாமே என்று;
நிர்பயமாய் அகண்டார்த்த
போதம் பெற்று;
நீக்க வொண்ணா பவபந்தம் அனைத்தும் நீக்கி;
அற்பமில்லா அகண்டார்த்த வடிவேயாகி;
அசஞ்சலமாய் ஆன்மாவில்
அமர்ந்து நிற்பாய்!

கருத்து:

மனோமய கற்பனையான
நாம, ரூப, ஜக, ஜீவ ஈஸ்வராதிகள் என்றும், லௌகீகம், தெய்வீகம்,
பரமார்த்தீகம் என்றும், துவைதம், விஷிஸ்டாத்வைதம்,
அத்வைதம் என்றும்,
விமர்சிக்கும் அனேகவித
பேதாபேதங்களையும் ஒழித்து  விட்டு, எல்லாம் ஒன்றே! அது ஆனந்த சுக சொரூபமே !
அதுவே நாம்! நாமே அது! என
அகண்டபாவனையில் மயமாவாயாக!

                          எல்லாம் நீ!

குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 92

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113