ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 91
weblink
பாடல்: 91
சிவோஹம் எனச் சொல்லியிடும் வாக்கியத்தில்;
சோதித்து விருத்தாம்சம்
நீங்கும் போதங்கு;
ஆயஜக ஐக்கியமே
அறியும் அர்த்தம்;
அவ்விதமே தத் த்வம் அஸி வாக்கியத்துள்;
ஏகமதாம் விருத்தாம்சம்
அனைத்தும் நீங்கி;
இயல்பான ஐக்கியமே
அறிந்து அதனால்;
ஆயமனோ பேதமெல்லாம்
இழந்து எப்போதும்;
அசஞ்சலமாய் ஆன்மாவில்
அமர்ந்து நிற்பாய்!
கருத்து:
சில ஜீவபர ஐக்கிய கருத்துக்களை, தியான ஸ்லோகங்களாகவும் தியான மந்திரங்களாகவும், நெட்டுருப்போட்டு
டேப் மாதிரி, ஜபித்துக் கொண்டே இருப்பதனால் என்ன பிரயோஜனம். காலம் தான் விரயமாகும். அவைகளின் உட்கருத்தை உணர்ந்தால் பலன் உண்டு.
A. சிவோஹம்: இதன் உட்பொருளாவது சிவம் + அகம் = சிவோஹம் ஆகும். அதாவது, சிவமே நாம்! நாமே சிவம்! என்பதாகும்.
B. ஹம்ஸோகம்: இதன் உட்பொருளாவது, ஹம்ஸம்+அகம் = ஹம்ஸோகம். அதாவது, ஹம்ஸ பக்ஷியானது, ஜலம் கலந்த பாலை, ஜலம் வேறு, பால் வேறு, என பிரித்து, பாலை மட்டும் உண்டு, ஜலத்தை விட்டு விடுகிறது. அதே போல், ஓர் ஸாதகன், ஸ்ரீ சத்குரு அருளும் வாக்கியங்களை கிரஹித்துக் கொண்டு ஆஸ்ரமமோ, வெளியிடங்களிலோ, தன் பழக்க, வழக்கங்களில் (வார்த்தைகளில் விபரீதம், செயல்களில் களங்கம்) ஈடுபடும்போது, குற்றம் குறை பேதங்களை நீக்கி பேதங்கள் என்னும் ஜலத்தை நீக்கி விட்டு, பொறுமையை மட்டும் கடைப்பிடித்துக் கொண்டு ஸத்வ அபேத அமல நிலையில், கருணையின் அமுத பிரவாகமாகிய பாலை மட்டும் ஏற்றுக் கொள்ளும் ஹம்ஸ பறவையாய் யாம் இருப்போம், என அமைகிறது.
C. ஹரி ஓம் தத் ஸத்: இதன் உட்பொருள், ஹரி ஓம் = அந்த ஒன்றை அறிவோம்! அறிந்து அது ஆவோம்! நாமே அது! என ஆவோம் என்றும் ஸத் என்றால் பரம்பொருள்! தத் என்றால் பரமாத்மா!! தத் ஸத் என்றால், ஸ்ரீ பகவானும் ஸ்ரீ பரம்பொருளும் என உணர்த்துகிறது.
பரமாத்மா என்ற ஸ்ரீ பகவானாகிய, ஈசன் நிலையானது, மாயா என்றோ மாயா சொரூபம் என்றோ தள்ளி விடாதே! அப்படி நீ, தள்ளி விடுவாயானல், இக்கலியில் உனக்கு கதி மோட்க்ஷமே இல்லையென்பதை உணர்த்துகிறது. தத்பதம் என்ற ஸ்ரீ பரமாத்மா ஸத் என்ற பரசொரூபத்திற்கு அன்னியமில்லை. நாமும் அதற்கு அன்னியமில்லை என உணர்.
D. ஹரிஹர் என்றால், ஹரி ஹரன் எனற, இரு மூர்த்திகளையும் பக்தி நிலையில் குறிப்பதாகும். ஆனால் அதுவே, ஞான நிலையல் சொல்வது என்றால்,
ஹரி: அறிவு = ஆத்மா
ஹர்(ஹரன்) = தர்மம்
அதாவது ஸத்தியம் பேசும் தர்மமானது அறிவு என்ற ஆன்மாவில் சேர்ந்து விடும்! மேலே கூறிய நான்கையும் உணர்ந்து செயல்படவும்.
இப்பாடலில் ஆயஜக ஐக்கியமென்றும், ஆயமனோ பேதம் என்றும், இரு வாசகங்களை காண்கிறோம்.
1. ஆய ஜக ஐக்கியம்: ஆய என்றால் எல்லாம் என பொருள்படும். நாம ரூப ஆக ஜீவ ஜக ஈஸ்வராதிகள் எல்லாம் அந்த ஒன்றுக்கு அன்னியமில்லை என்ற, ஐக்கியத்தை உணர்த்துகிறது!
2. ஆய மனோ பேதம் என்றால், மேலே கூறிய அனைத்திலும் அதாவது, எல்லாவற்றிலும் குற்றம், குறையும்! பேதமும்! நிறைந்திருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
"தத் த்வம் அஸி" எப்படி தத் பதம்; த்வம் பதம்; அஸி பதம் (பரமாத்மாவும், ஜீவாத்மாவும், பரம்பொருளும்), ஒன்றே என எப்படி ஐக்கியத்தை உணர்த்துகிறதோ, அதே நிலையில் சிவம் = அகம் = சிவமே நாம் என உணர்ந்து, ஆய மனோ பேதங்களை தள்ளி, ஆய ஜக ஐக்கியத்தை ஏற்றுக் கொண்டு, அதுவே நாம்! நாமே அது! என
சமுக்திரத்தில், உப்புப் பதுமையென கலந்து விடு!
எல்லாம் நீ!