ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 88

weblink

பாடல்: 88

ஸத்தியமாய் ஜகத்து முதல் இருக்குமாகில்;
சலனமற சுழூப்தியிலும்
இருக்க வேண்டும்!
இத்தனையும் சுழூப்திதனில் இலாமையாலே;
இவையாவும் கனவெனவே
மித்தை யென்றும்;
நித்தியமாய் நின்ற அகம்
பிரம்ம மென்றும்;
நிர்மலமாம் அபேத பர
ஞானத்தாலே;
அத்திரமாம் பேதமதி 
அனைத்தும் தள்ளி,
அசஞ்சலமாய் ஆன்மாவில் 
அமர்ந்து நிற்பாய்!

கருத்து:

உண்மையாகவே,  இந்த நாம ரூப ஐக, ஜீவர்கள், இருக்கக்  கூடுமானால்,
அது எம் ஆழ்ந்த உறக்கத்திலும்
இருக்க வேண்டும். எம் உறக்கத்தில், இவ்வுலகம் இல்லவே இல்லை. யாம் தூங்கும் போது மற்றவன்
இவ்வுலகத்தை காண்கிறானே என்றால்? அது சமயம், எமக்குத் தோன்றும் இவ்வுலகமும், ஜீவர்களும், உறவு, சுற்றம், மனைவி, மக்கள், பொன், பொருள், போகம், இவை அனைத்தும் இருந்தென்ன? போயென்ன? தூங்கியவன் ஒரே தூக்கமாக தூங்கி விட்டால், மேலே கூறியவைகளால், எமக்கு என்ன பிரயோஜனம்? ஆகவே, இந்த நாம ரூப, ஜகம் இல்லவே இல்லையென, முடிவு செவ்வாயாக! அதாவது, மண்ணில் வந்த பாத்திர பாண்டங்கள், உடைந்தால் மண்தானே?
அதைப் போலவே பிரம்மத்தில் தோன்றிய இந்த ஜகம் இல்லாதது தானே? அந்த ஒன்றே ஸத்தியம்! அதுவே யாம்!

                             எல்லாம் நீ!


குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 88

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113