ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 86

weblink


பாடல்: 86

காமமொடு கோபம் முதல்
அனைத்தும் தள்ளி;
கர்வமுடன் டம்பம் முதல்
அனைத்தும் தள்ளி;
தோமருவு மோஹம் முதல்
அனைத்தும் தள்ளி;
துவைதமொடு அத்வைதம் முதல் அனைத்தும் தள்ளி;
நாமமொடு உருவம் முதல்
அனைத்தும் தள்ளி;
நாம் பிறர் என்ற இவை முதலாம் அனைத்தும் தள்ளி;
ஆம் அல்ல என்று அறிவுற்றது அனைத்தும் தள்ளி;
அசஞ்சலமாய் ஆன்மாவில்
அமர்ந்து நிற்பாய்!

கருத்து:

காமம், குரோதம் முதலிய ஆறு குணங்களையும் தள்ளி, வியாபாரம், (எதிர்பார்ப்பு) விளம்பரம், ஆடம்பரம்
முதலிய கலிதோஷ குணங்களையும் தள்ளி, கலக்கம், பயம், துக்கம் இவற்றின் மூலதனமான சந்தேகம்
இவைகளையும் தள்ளி, துவைத அத்வைத பேதங்களையும் தள்ளி, அவன் அவள்; அது இது;  இது உண்டு, இல்லை; என்ற இவைகளின் நாமரூபங்களையும் தள்ளி, மற்றுமுள்ள அனைத்தையும் நீக்கி விட்டு, அது நாம்! நாமே அது! என அசைவற்று இருப்பாயாக! 

                              எல்லாம் நீ!


குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 86

Comments

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 76