ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 84
பாடல்: 84
சிவனென்றும்; ஹரியென்றும்; விரிஞ்சனென்றும்;
சிருஷ்டியென்றும்; ஸ்திதியென்றும்;
நாசமென்றும்;
தவமென்றும்; ஜபமென்றும்;
தீர்த்தமென்றும்;
ஞானமென்றும்; தெய்வமென்றும்; சேவையென்றும்;
கவருற்ற மயக்கங்கள்
ஒன்றுமில்லை!
களங்கமில்லா பிரம்மம் எல்லாம்!
அது நாம் என்றே!
அவமற்ற உறுதியினால்
அனைத்தும் தள்ளி;
அசஞ்சலமாய் ஆன்மாவில்
அமர்ந்து நிற்பாய்!
கருத்து:
திரிமூர்த்திகள் என்றும், அவர்களின்
தொழில் என்றும், தீர்த்தம், மூர்த்தி, ஸ்தலம், என்றும், தானம், தருமம், சேவையென்றும், நம் உள்ளம் கவர்ச்சியடையக் கூடிய, எந்தவித புறச்செயலாகிய பிரவர்த்திகளும்
இல்லவே இல்லை!
களங்கம், கலக்கம், சந்தேகம், பயம் இல்லாத பிரம்மம் ஒன்றே ஸத்தியம்! அதுவே நாம்! நாமே அது! என்ற பரபாவனையில், அசையாமல் இருப்பாயாக!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 84