ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 81
weblink
பாடல்: 81
பிரம்மமதே மும்மூர்த்தி
எனவும் தோற்றும்!
பிரம்மமதே மூலசிவம்
எனவும் தோற்றும்!
பிரம்மமதே ஐம்பூதம்
எனவும் தோற்றும்!
பிரம்மமதே அனந்த உலகு
எனவும் தோற்றும்!
பிரம்மமதே சராசரமாய்
தோற்றலாகும்!
பிரம்மமதே சகலமுமாய்
தோற்றலாகும்!
பிரம்மமல்லாது ஒரு பொருளும் என்றுமில்லை!
பிறங்கியிடும் பொருளெல்லாம் பிரம்மம் தானே!
கருந்து:
ஆதிமூல சிவமாகவும், மும்மூர்த்தியாகவும், பஞ்சபூதங்களாகவும், கோடானுகோடி அண்டங்களாகவும், ஈரேழு புவனங்களாகவும், எல்லா ஜீவ வர்க்கங்களாகவும், மேலே கூறிய அனைத்து உருவங்களாகவும் தாமே
தோன்றி விளையாடிக் கொண்டிருப்பது அந்த ஒன்றே!
ஆனால், அந்த ஒன்றிடம் இந்த நாம ருப தோற்றங்கள் இல்லை! மண்ணில் பாண்டங்கள் இல்லை!
ஆனால், அப்பாண்டங்கள் மண்ணுக்கன்னியமில்லாத மண்ணால் ஆனதே! அதுவே நாம்! நாமே அது என சும்மா சுகமாக இருப்பாயாக!
எல்லாம் நீ!