ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 85
weblink
தூரத்தள்ளி;
பஞ்சமஹா அட்சரமும்
தூரத்தள்ளி;
இலகிய அஷ்டாட்சரமும்
தூரத்தள்ளி;
இவை ஓதும் குருவையுமே
தூரத்தள்ளி;
நிலைமருவா வசனமெல்லாம் தூரத்தள்ளி;
நிகழ்த்தியிடா மௌனமுமே தூரத்தள்ளி;
அலை மனநின் விகல்பங்கள் அனைத்தும் தள்ளி;
அசஞ்சலமாம் ஆன்மாவில்
அமர்ந்து நிற்பாய்!
கருத்து:
கோடானு கோடி மந்திரங்களையும்,
அதீத மந்திரங்களான, பஞ்சாட்சரம்,
அஷ்டாட்சரம், சடாட்சரம், பீஜாட்சரம், ஆகிய மந்திரங்களையும், இவைகளை, முறையோடு ஒதும், குருமார்களையும் ஒதுக்கி வைத்து விடு. தர்க்க குதர்க்க வாதங்களை விடு. மௌனம், தியானம், இவைகளை விடு. சலிக்கின்ற மனதை பரபாவனையால், அதுவே நாம்! நாமே அது! என்ற நிலையில் அசைவற நிறுத்து!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 85