ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 83

weblink


பாடல்: 83

அகம்பிரம்ம நிச்சயமே
அகத்திலுள்ள;
அஞ்ஞானம் சந்தேகம்
அனைத்தும் போக்கும்!
அகம்பிரம்ம நிச்சயமே
அகத்திலுள்ள;
அனேகவித விபரீத
தோஷம் நீக்கும்!
அகம்பிரம்ம நிச்சயமே
ஆன்மாவின் கண்;
அசஞ்சலமாய் அமர்கின்ற
சமாதி நல்கும்!
அகம் பிரம்ம நிச்சயமே
பதிபந்தங்கள்;
அணுவுமில்லா அபரோட்ச
ஞானம் நல்கும்!

கருத்து;

"அகம் பிரம்மம்; பிரம்மம் அகம்" என்ற பிரம்மான்ம பாவனையானது,

குற்றம் குறை, பேத உணர்வு, விருப்பு வெறுப்பு, ஆகியவைகளை, உண்டு பண்ணும் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும்!

வினோத விபரீத, விரோத குரோத, விசித்திர தோஷங்களை நீக்கும்!

அகண்டான்ம பாவனையில் ஸ்திரமாக, நிற்கப் பண்ணும்!

பசுவால் (உயிர்களால்) வரும் பாசத்தை நீக்கி, பதி (கடவுள்) என்ற தன்மையை கொடுக்கும்!

பற்றற்ற நிலையில், அந்த ஒன்றை (ப்ரம்மத்தை) பற்றிய நிலையை கொடுக்கும்!

                             எல்லாம் நீ!

குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 83

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113