ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 82
பாடல்: 82
சகலமுமாம் இவை வேறு
நாம்தான் வேறு;
ஸத்பிரம்மம் வேறென்றெண்ணும்
பேத புத்தி(யானது);
அகிலமுமே அகண்ட
பரப்பிரம்ம மென்றும்;
அது நாம் என்றும்;
நாம் அது என்றும்;
வெகுதிடமாம், அகண்ட பர
நிச்சயந்தால்;
வேறறவே எளிதாக
நீங்குமேயன்றி;
இகழ்வு தரும் கரும்
உபாசனை யாலோன்றும்;
இயம்பிய இப்பேதமதி
எளிதில் நீங்கா(து)!
கருத்து:
அனைத்து அண்டங்களும், அவற்றிலுள்ள ஜீவ கோடிகளும் வேறு என்றும், நாம் வேறு என்றும், காலாதீத பரப்பிரம்மம் வேறு என்றும், கற்பனையால் என்னும் பேத புத்தியானது,
எல்லாம் ஒன்றே! அது ஆனந்த சுக சொரூபமே! அது நாமே! நாமே அது! என்ற திட உணர்வால், நீங்குமே அல்லாது, வேறு மந்திர, தந்திர, யோகம், பக்தீ உபாசனை, ஆகிய எவைகளினாலும் நீங்காது!
எல்லாம் நீ!