ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 80
weblink
பாடல்: 80
மாரணமில் அறிவான
பிரம்மம் அல்லால்;
மாயை இல்லை! அவித்தை இல்லை! மற்றொன்றில்லை!
சீரணமில் அறிவான
பிரம்மம் அல்லால்;
ஜீவனில்லை! ஈசனில்லை!
ஜகத்தும் இல்லை!
பூரணமாம் அறிவான
பிரம்மம் அல்லால்;
பொய்யுமில்லை! மெய்யுமில்லை! பிரிதொன்றில்லை!
காரணமாம் அறிவான
பிரம்மம் அல்லால்;
காரியமாய் காண்கின்றது
எவையும் இல்லை!
கருத்து:
எந்த மறைப்பும் இல்லாத ப்ரம்மம் ஒன்றே ஸத்தியம்! அதில் தோன்றிய மாயையோ, மாயையில் தோன்றிய அவித்தையோ, மற்றெதுவும் இல்லவே இல்லை.
கெட்டுப் போகாத பிரம்மம் ஒன்றே ஸத்தியம்! கெட்டுப் போகக்கூடிய நாமரூப, சூட்சும வடிவங்களான, ஜகம், ஜீவன் & ஈசன், இல்லவே இல்லை.
பரிபூரண சொரூபமான ப்ரம்மம் ஒன்றே ஸத்தியம்! பொய், மெய், என்று தர்க்க, குதர்க்க வாதங்களால் வாதமிடும் எவையும் இல்லை.
அனைத்திற்கும் காரண சொரூபமான, பிரம்மம் ஒன்றே ஸத்தியம்! காரிய சொரூபங்கள் எவையும் இல்லை.
அதாவது, அனைத்திற்கும் காரணமாகிய மண்ணே ஸத்தியம்! காரிய வஸ்துக்களான, பாண்டங்களோ, பொன் ஆவரணங்களோ இல்லவே இல்லை!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 80