ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 79
weblink
பாடல்: 79
(அகம் பிரம்மம்; ஜகம் பிரம்மம் என்ற) வசனத்தை சப்தத்தால் உரைப்பதற்கோர்;
வருத்தமில்லை! ஆதலினால்
அசத்த ரெல்லாம்;
நிஜ வடிவின் பாவனையில்
மனது நின்று;
நிச்சலமாய் அனுபூதி
நிலைக்கு மட்டும்;
பிசகறவே சகலமுமே
பிரம்ம மென்றும்;
பிரம்மமதே நாம் என்றும்,
நாம் அது என்றும்;
அசலமதாம் அகண்டான்ம
சொரூபம் தன்னை;
அறிவிக்கும் சப்தத்தை
உரைக்க வேண்டும்!
கருத்து:
"அகம் பிரம்மம்; ஜகம் பிரம்மம்" என்ற அகண்டான்ம பரபாவனையை, திரும்ப திரும்ப சொல்வதனால் எந்த வருத்தமோ, சிரமங்களோ இல்லை!
நாம ரூப குண தோஷங்கள், விலகி மனம் மஹத்தாகி, அமைதி, ஸாந்தி ஆகியவை இயல்பாக நிலை பெறும் வரை தொடர்ந்து, "அதுவே நாம்; நாமே அது; எல்லாம் நாமே!" என தைலதாரை போல், அகண்டான்ம பரபாவனையை செய்து வருவாயாக!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 79