ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 78
weblink
பாடல்: 78
அகம் பிரம்மம் என்றுணரும்
ஆத்ம ஞானம்;
அதி திடமாம் விவேகத்தால் ஜனிப்பதாகும்!
அகம் பிரம்மம் என்றுணரும்
ஆத்ம ஞானம்;
ஆசிரியன் கருணையினால் கிடைப்பதாகும்!
அகம் பிரம்மம் என்றுணரும்
ஆத்ம ஞானம்;
அனவரதம் பழக்கத்தால்
உரப்பதாகும்!
அகம் பிரம்மம் என்றுணரும்
ஆத்ம ஞானம்;
அகண்ட சிவம் கருணையினால் நிலைப்பதாகும்!
கருத்து:
அகம் பிரம்மம்; பிரம்மம் அகம்;
அகமே எல்லாம்!
அதாவது, அதுவே நாம், நாமே எல்லாம் என்ற அகண்டான்ம பரபாவனையானது,
1. சிரத்தையோடு, செய்யச் செய்ய, அனுபவம் பெருகும்!
2. மேலும் திடமான விவேக உள்ளத்தில் தான் பிறக்கும்!
3. ஸத்குரு கருணையினால் தான், அது கிடைக்கும்!
4. தைலதாரை போல், சிந்திக்க சிந்திக்க உறுதியாகும்!
5. இறை, பர கருணையினால் தான் நிலை பெற்று நிற்கும்!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 78