ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 77

weblink

பாடல்: 77

ஸின்மயமாம் எம்மிடையே
கனவில் கண்ட,
ஜக முதலாய் எமக்கயலாய்
இலாததே போல்;
ஸின்மயமாம் எம்மிடையே
நனவில் கண்ட,
ஜக முதலாய் எமக்கயலாய்
என்றும் இல்லை!
ஸின்மயமாம் நாம் தானே
என்றும் ஒன்றாய்;
செறிந்தகில பூரணமாய்
சிவமாய் நின்றோம்!
ஸின்மயமாய் நாம் நாமாய்
நின்றோம் என்று;
சிந்தித்து சிந்தித்து
சிவமே யாவாய்!

கருத்து:

ஸத்தாகிய ஸித் சொரூபமான எம்மிடமே, நனவும், கனவும், வந்து இருந்து மறைந்து விடுகின்றன!

ஆகவே, இந்த நாம ரூப ஜக ஜீவ தோற்றம், எமக்கு அயலாக முக்காலங்களிலும், எக்காலங்களிலும், என்றுமே இல்லை.

ஆகவே, எல்லாம் "ஒன்றாகவும்", எல்லாம் "யாமாகவும்" இருக்கிறோம் என்பதே பிரமாண உண்மையாகும்.

                            எல்லாம் நீ!


குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 77

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 130

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113