ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 76

weblink

பாடல்: 76

ஸின்மயமாம் எம்மையல்லால் ஸங்கல்பத்தின்;
செயலான ஜகத்தோற்றம்
எவையும் இல்லை!
ஸின்மயமாம் எம்மையல்லால் ஸங்கல்பத்தின்;
செயலான ஜீவேஸ்வரர் யாருமில்லை!
ஸின்மயமாம் எம்மையல்லால்
ஸங்கல்பத்தின்;
செயலொன்றும் ஒருகாலும்
இலவே இல்லை!
ஸின்மயமாம் நாம் என்றும்
சிவமே என்றும்;
சிந்தித்து சிந்தித்து
சிவமேயாவாய்!

கருத்து:

ஸத் ஆகிய ஸித் சொரூபமாகிய,
எம்மையல்லால் நாம ரூப, ஜக ஜீவ
தோற்றங்களும், கர்த்தாக்களாகிய ஈஸ்வராதிகளும், மற்றும் எவையும், எந்த செயலும், இல்லவே இல்லை!

யாமே எல்லாம்! அதுவே யாம்! யாமே அது! என்று சிந்தித்து சிந்தித்து அது ஆவாய்!

                          எல்லாம் நீ!


குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 76

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113

"Sri Satguru Thuli Baba's Blessings"

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 53