ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 53
பாடல்: 53
சகலமுமே பிரம்மமென்னும் நிச்சயத்தால்;
ஜக முதலீது உண்மையென்னும் பிராந்தி நீங்கும்!
திகழ் பிரம்மம் நாம் என்னும் நிச்சயித்தால்;
தேக முதல் நாம் என்றும்
பிராந்தி நீங்கும்!
தருமகனே! ஆதலினால்
எல்லாம் என்றும்;
தற்பிரம்மம் தாம் என்றும்,
அது நாம் என்றும்;
வெகுதிடமாம் அநுபூதி அடைந்தெப்போதும்;
வேறறவே மிகவும்
உபசாந்தனவாய்!
கருத்து:
நாம ரூப, ஜகத் ஜீவ, தோற்றங்களும்
பிரம்மமேயன்றி, நாம ரூப குண இயக்கம் இல்லவே இல்லை!
அதைப் போலவே, நாமும் தூல நாம ரூப குண இயக்கம் இல்லவே இல்லை!
இவை அனைத்தும் மனோ மயக்கமேயன்றி உண்மையில் இல்லவே இல்லை!
நாம் காலாதீத பரப்பிரம்மமே! பரப்பிரம்மமே நாம்! என தைலதாரை போல் சிந்தித்து ஸாந்தியாய் இருந்து அது ஆவாயாக! மனம் படுத்தும்பாடு வெகு அற்புதம். அம்மனதை வெகு எளிதாக வெல்வாயாக!
எல்லாம் நீ!