ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 75
weblink
பாடல்: 75
ஸின்மயமாம் எம்மிடையே
மனது உதித்து;
ஸின்மயமாம் எம்மிடையே
மற்றும் இருந்து;
ஸின்மயமாம் எம்மிடையே அடங்கலாலே;
ஸின்மயமாம் எம்மையல்லால்
மனதே இல்லை!
ஸின்மயமாம் எம்மையல்லால் மனதில்லாததால்;
ஸின்மயமாம் எம்மையல்லால் எவையும் இல்லை!
ஸின்மயமாம் நாம் என்றும்,
சிவமே என்றும்;
சிந்தித்து சிந்தித்து,
சிவமே ஆவாய்!
கருத்து:
ஸத்தாகிய, ஸித்சொரூபமாகிய எம்மிடமே இந்த மாயா மனம் தோன்றியது. எம்மிடமே நாம ரூப ஜகத் ஜீவ கோடியின், சரீரங்களை உண்டு பண்ணியது. எம்மிடமே நான் எனது, என அஹங்கார தோஷம் கொண்டு, நன்றாகவே, சுவாரஸ்யமாகவே, விளையாடியது. விளையாட்டு எப்படி எப்படியெல்லாம், இருந்தாலும் விளையாட்டை முடித்துக்கொண்டு, ஒவ்வொரு இரவும், எம்மிடையே அடங்கி ஒடுங்கி, அமைதியாக இந்த மாயா மனம் இருந்து கொள்வதால்,
எம்மையல்லாம் இந்த நாம ரூப, ஜகம்
இல்லவே இல்லை! ஆகவே அதுவே யாம்! யாமே அது!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 75