ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 74

weblink

பாடல்: 74

மனதை அல்லால் ஜகமுதலோர் அணுவுமில்லை!
மனததுவே, ஜகமுதலாய்
தோற்றலாகும்!
சொன்ன மனது ஸங்கல்ப வடிவேயாகும்!
சோதிக்கின் ஸங்கல்பம்
ஸித்தாய் தீரும்!
மனதுடைய ஸங்கல்பம் 
ஸித்தாய் தீர்ந்தால்;
மனததுதான் ஸின்மயமாம்
சிவமே ஆகும்!
ஜனன (மரண)மில்லா ஸின்மயமாம் சிவம் நாம் என்றே;
சிந்தித்து சிந்தித்து
சிவமேயாவாம்!

கருத்து:

மனம், புத்தி, சித்தம்! ஆகிய இம்மூன்றும், ஒன்றே! ஆனால் நிலை கண்டு செயல்படும்.

மனதின் வடிவம், ஸங்கல்பம், விகல்பம், ஆகும். ஸங்கல்பம், விகல்பம்  என்பது,
அம்மனமானது, தன்னுடைய விருப்பம் நிறைவேற எடுக்கும் உறுதி என்றும்; மற்றும் கற்பனையை குற்றம் குறையாகவும், பேதா பேதமாகவும், உண்டு பண்ணி, ஓர் மாபெரும், குழப்பத்தை உண்டு பண்ணுவதை, விகல்பம் என்றும் உணர்க!

இதை நன்றாக உணர்ந்து
பார்த்தால் மனம், புத்தி, சித்தம், ஆகிய இம்மூன்றுமே, "ஸத்தாகிய ஸித் சொரூபமே" என, உறுகி கொள்ள வேண்டும். ஸத்தாக இருக்கம்போது
அசைவற்றது. அது ஸித்தாக மாறும்போது விளையாட்டின் நிமித்தம்
மனம், புத்தி, சித்தம் என தன்னை
தானே தோற்றுவித்துக் கொண்டு, "நான், எனது" என்னும் அஹங்கார வடிவெத்து மிகவும் காரசாரமாக விளையாடுகின்றது.

இனி பாடலுக்கு வருவோம்!
கற்பனை பண்ணும் மனதுக்கு அன்னியமாய், ஜகம் இல்லை. கற்பனை இல்லாமல் ஜகம் இல்லை!
ஜகம் இல்லையானால், மனதிற்கும், கற்பனைக்கும் அங்கு வேலையில்லை. 

ஆகவே, கற்பனையே...உலகம்; உலகமே...கற்பனை. இவை இரண்டுமே மனதின் மாயாஜாலமாகும்.

இம்மனம் சித்த வடிவமல்ல; இம்மனம் ஸின்மய வடிவம். அப்படியானால், மனமோ, கற்பனையோ, ஜகத்தோ, சித்தத்தின் படி வடிவெடுத்த ஸின்மயமே!

அந்த ஸின்மயமான, சிவமே நாம் 
என அதுவே ஆவாயாக!

                            எல்லாம் நீ!


குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 74

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113