ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 73
weblink
பாடல்: 73
சித்தம் அல்லாது பிரபஞ்சம்
என்றும் இல்லை;
சித்தம் தான் பிரபஞ்சம்
எனவே தோற்றும்!
சித்தம் அல்லால்
சம்சாரம் என்றும் இல்லை;
சித்தம் தான் சம்சாரம்
எனவே தோற்றும்!
சித்தமதை சோதித்தால்
சித்தே ஆகும்;
ஸித்தான சித்தமதே
சிவமாய் நிற்கும்!
சித்தம் இல்லா(த) ஸின்மயமாம்
சிவம் நாம் என்றே;
சிந்தித்து சிந்தித்து
சிவமே யாவாய்!
கருத்து:
நாம ரூப, ஜக ஜீவ வடிவ தோற்றங்களை, மனம், புத்தி எனும் சித்தமே, தம் உறுதியினால் உருவகப்படுத்தி, அவைகள் உண்டு என ஸ்தாபிப்பதால், மேலே கூறியவைகள், இருப்புடையதைப் போல், மனம் படைத்த மனிதனை மட்டுமே மயக்குகிறது.
இதைப் போலவே, ஸம்ஸாரி என்றும். குடும்பி என்றும், எவனும் கட்டுப்படவும் இல்லை.
மனம், புத்தி எனும் சித்தமே, தன் மன உறுதியினால், நீ ஸம்ஸாரிதான்! நீ ஓர் குடும்பிதான்! என கட்டுப்படுத்திக் கொண்டது. இது ஸத்தியம்.
இதன் ரகஸ்யம்: கட்டுப்பட்டது சித்தமே தவிர, நாம் இல்லவே இல்லை! நாம் அவனாகிய அதுவே! அவன், நாமாகிய அதுவே!
அவன் - தத் பதம்; நாம் - த்வம் பதம்;
அது - அஸி பதம் (தத் த்வம் அஸி) அவன், நாமாகிய அதுவே!
நம் அறியாமையினால், சித்தத்தால்,
பந்தப்பட்டோம். பின் அந்த சித்தை, நம் அறிவு ஊன்றி விசாரிக்கும்கால்
ஸித் சொரூபமே, சித்தமாக வடிவெடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறதென, உணர்ந்தோம்
எம் ஸத்குரு கிருபையால், யாம் சித்தம் ஆக்கிய ஜீவனல்ல. ஸத்தினுடைய ஸித் சொருபமே! என ஆனந்தமாக இருக்கிறோம்! என சிந்தித்து, சிந்தித்து அது ஆவாயாக!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 73