ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 70


பாடல்: 70

தன்சொரூப நிலை மருவாது அலைவோருக்கு;
தளர்வு தரும் பவபந்தம்
தவிர்வ தெங்கண்?
என் செய்யினும் சொரூப நிலை இசையா தோர்க்கு;
ஈனமுறும் பவபந்தம்
இறவா தென்றும்;
சஞ்சலமில்லா பாவனையே செய்வோருக்கு;
சலமனதின் விகல்ப மெல்லாம் தவிர்வதாலே;
அஞ்ஞானமாம் ஆவரண விட்ஷேபங்கள்;
அனைத்து மில்லா சொரூப நிலை அணுகுமன்றே!

கருத்து:

தன்னை அறியும் அறிவை அறிந்து தான் தானாய், நின்றோர்க்கல்லாது, தாழ்ச்சியை கொடுக்கும் பவபந்தம் ஒருக்காலும் தொலையாது!

அகண்டான்மபாவனை, செய்யாதவர்களுக்கு நாமரூப, ஆவரண மயக்கமும், அதனால் ஏற்படும் விட்ஷேப கலக்கமும் தொலையாது!

ஆகவே பிரம்மான்ம பாவனையாகிய
"நாமே அது! அதுவே நாம்"! என ஸ்வயமாய் இரு!.

                         
                         எல்லாம் நீ!


குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 70

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113