ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 71
weblink
ஸத்குருவின் சந்நிதியில்
ஓர்ந்த வண்ணம்;
ஸாதுக்கள் சகவாசம்
செய்தங்கங்கே;
நிர்க்குணமாம் பரப்பிரம்ம
சொரூபம் தானே;
நிகிலருமாம் அதுவே நாம்!
அதுவே உண்மை!
அட்சரமாம் பிரம்மமதாம்
வேதாந்தங்கள்;
அனைத்திக்கும் பொருளாகும் என்றிவ்வண்ணம்;
தக்க பர நிர்ணயமே
திடமாய்ச் செய்தல்;
(மனத்)தளர்வை யெல்லாம் தவிர்க்கின்ற விசாரமாமே!
கருத்து:
ஸ்ரீ ஸத்குருதேவரின், திருவாய் மொழியாக கேட்ட ஞானானுபவங்களை
ஸத்ஸங்க அன்பர்கள் மூலமாக தர்க்கம் பண்ணாமல், தெளிவு பெறலாம். அத்தெளிவு, எப்படி இருக்க வேண்டுமென்றால், நாம ரூப ஜகத் ஜீவ தோற்றங்கள் அனைத்தும், அந்த ஒன்றிற்கு அன்னியமில்லை. நாமும் அதற்கு அன்னியமில்லை.
இதுவே, வேத வேதாந்த சாஸ்திரங்களின் முடிவு என முடித்துக் கொள்வதாக இருக்க வேண்டும். இங்கு கலக்கம் சந்தேகம் வரலாகாது.
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 71