ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 69
weblink
பாடல்: 69
நிச்சலமாய் உணர்வுற்று
நிறைந்து நிற்கும்;
நிலையதுவே கைவல்ய
மோட்சமாகும்!
துச்சமிலா அந்த நிலை
தொடர்ந்தோர் மீண்டும்;
துன்பமுறார்! துகண்மருவார்!
சுகமே சார்வார்!
(அவர்) எச்செயலும் செய்து முடித்தவராவர்!
(அவர்) எப்போதும் ஏகபர
வடிவாய் நிற்பர்!
அச்சுக பரவடிவான
அன்னோர்க்கு இங்கு;
ஊனபவ விவகாரம்
ஒன்றுமில்லை !
கருத்து:
மேலே கூறிய நிலையில் அறிவுபூர்வமாக இருந்து அகண்டானந்த நிலை பெற்றவர், பிறந்த பிறவிப் பயனை, எய்தியராவர்.
அவர் இங்கு செய்ய வேண்டியதை செய்து முடிந்து விட்டார். அவருக்கு துன்பமோ துயரமோ, கஷ்டமோ கவலையோ, எந்த தோஷமும் இல்லவே இல்லை. அவர் சுபத்திற்கும் சுபமாக சுலபமாக இருப்பர்.
எல்லாம் நீ!