ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 68

weblink

பாடல்: 68

அகண்ட பரிபூரணமாம்
பிரம்மம்தானே;
அறிவற்றோர்க்கு உலகெனவே தோற்றினாலும்;
புகன்ற பல விதமான
உலகம் தானே;
பூரணமாம் அறிஞர்க்கு
பரமாய் தோற்றும்!
திகழ்ந்தெதிரே இருக்கின்ற
ரட்சுதானே;
தெரிவற்றோர்க்கு அரவெனவே தோற்றினாலும்;
நிகழ்ந்தரவே தெரிவுற்றோர்க்கு ரட்சுவாக;
நிகழ்கின்ற நீதியினை கண்டோமன்றோ ?

கருத்து:

காலாதீத, அகண்ட பரிபூரணமான பரம்பிரம்மமானது, அறிவில்லாத புத்தி சொரூபமானவர்களுக்கு நாம ரூப ஜகத் ஜீவ சொரூபங்களாக தோற்றும்! புத்தி கெட்டு அறிவு சொரூபமாக இருப்பவர்களுக்கு பரிபூரணமான பர சொரூபமாகவே தோற்றும்!
 
                           எல்லாம் நீ!


குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 68

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113